தென் கொரியாவில் உங்கள் குழந்தைகளுக்குகான இலவச தடுப்பூசிகள் (பிறப்பு முதல் 12 வயது வரை)
தொகுப்பு : டாக்டர் ஷோபா சரவணகுமார் 

தென் கொரியாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு தேசிய சுகாதார காப்பீட்டுக் கழகத்தின் (என்.எச்.ஐ.சி) மருத்துவக் காப்பீடு கட்டாயமானதாகும். இந்த காப்பீடு சார்புடையவர்களும் பொருந்தும். தென் கொரியாவில் வசிக்கும் எந்தவொரு நபரும் ஒரு பொது சுகாதார மையத்திற்கு (போ கன் சோ) செல்லலாம். உள்ளூர் கவுன்சில்களின் கொள்கை மற்றும் பட்ஜெட் ஆகியவை மருத்துவ சேவைகள் மற்றும் சலுகைகள் இலவசமாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்துகிறது


பொது சுகாதார மையத்தில் பதிவு செய்ய தேவைப்படும் ஆவணங்கள்:
1) தேசிய மருத்துவ காப்பீட்டு அட்டை
2) பாஸ்போர்ட்
3) வெளிநாட்டவர் பதிவு அட்டை
4) மகப்பேறுகால புத்தகம் அல்லது சான் மோ சு சுப், இது பெண்ணின் கர்ப்பம் உறுதிப்படுத்தப்படும்போது வழங்கப்படும்

மருத்துவ பரிந்துரை சேவை (எம்.ஆர்.எஸ்)
தென் கொரியாவில் வசிக்கும் வெளிநாட்டினர் அனைவருக்கும் பயன்பெறும் வகையில், 24 மணிநேர, இலாப நோக்கற்ற மற்றும் தன்னார்வ அடிப்படையிலான ஒரு சேவையாகும், இந்த சேவையின் மூலம் மருத்துவ ஆலோசனைகளை பெற முடியாது, ஆனால் எங்கிருந்து உதவி பெற வேண்டும் என்று அறிந்து கொள்ள முடியும் மேலும் வெளிநாட்டவர்கள் தங்கள் இருப்பிடத்தின் அருகிலிருக்கும் ஆங்கிலம் பேசும் மருத்துவர்கள் அல்லது மருத்துவச்சிகளை கண்டுபிடிக்கவும் உதவுகின்றது.

மருத்துவப் பரிந்துரை சேவை தொலைபேசி: 010 4769 8212/010 8750 8212. இந்த இலவச ஆங்கிலம் மொழிபெயர்ப்பு சேவையை, மருந்துவ தகவல் பற்றிய சிக்கல்கள் இருந்தால் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

தேசிய சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் பெற்றோர்கள் தங்கள் அனைத்து குழந்தைகளும் நான்கு மாதங்கள் முதல் ஆறு வயது வரை இலவச மருத்துவ மற்றும் பல் பரிசோதனைச் சேவைகளைப் பெறமுடியும். குழந்தையின் சோதனைக்கான அறிவிப்பு கடிதம் அவர்களின் குடியிருப்பு முகவரிக்கு தேசிய சுகாதார காப்பீட்டுக் கழகத்தால்அனுப்பப்படும். உள்ளூர் பொது சுகாதார மையம் அல்லது குழந்தைக்கு மருந்து பார்க்கும் மருத்துவமனைகளுடன் தொலைபேசி மூலம் பரிசோதனைகளுக்கு ஏற்பாடு செய்யலாம்.

தென் கொரியாவில் ஒரு குழந்தை பிறக்கும் போது தாய்மார்களுக்கு ஒரு சுகாதார பதிவு புத்தகம் (அகி கன் கேங் சு சுப்) வழங்கப்படுகிறது. அதில் குழந்தைக்கான மருத்துவ நடைமுறைகள், மருத்துவமனைகள், அனைத்து பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிகள் இந்த புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

தடுப்பூசிகள்

தென் கொரியாவில், எட்டு வகையான தடுப்பூசிகள் பிறப்பு முதல் 12 வயது வரை பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்த தடுப்பூசிகள் பொது சுகாதார நிலையங்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைகளில் இலவசம்.
பெற்றோர்கள் தங்கள் விருப்பப்படி ஒரு தனியார் குழந்தைகள் நல மருத்துவரிடமும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளலாம்.

பரிந்துரைக்கப்படும் எட்டு தடுப்பூசிகள்:

காசநோய்
ஹெபடைடிஸ் பி
தொண்டைக்கரப்பான்
டெட்டனஸ்
கக்குவான் இருமல் போலியோ தட்டம்மை
பொன்னுக்கு வீங்கி
ருபெல்லா
சிக்கன் பாக்ஸ்
ஜப்பானிய என்செபாலிட்டி
இன்ஃப்ளூயன்ஸா

கொரிய தமிழ்ச் சங்கம்
© 2019 ~ 2020 koreatamilsangam.com
All Rights Reserved Terms of Use and Privacy Policy